ஆனிப்பொன் தொட்டிலில் அழகு ரோஜா மலர்ச்சரம் !
ஆடி வெள்ளி அணிவிளக்கே தாலேலோ தாலேலோ ..
பாடி வந்த பசுங்கிளியே ஆடி வந்த அழகு மயில் !
தேடி வந்த தேன்நிலவே நாடி வந்த நட்சத்திரம் !
ஆரிரரோ ஆராரோ ஆள வந்த ஓவியமே !
ஆரிரரோ ஆராரோ காவியமே கண் வளராய் !
முத்துமணி பல்லக்கே மூன்றாம் பிறை நிலவொளியே !
மரகதமே மாணிக்கமே மண்ணில் வந்த வெண்நிலவே !
ஆரிரரோ ஆராரோ வைரமணி பெட்டகமே !

ஆரிரரோ ஆராரோ வைடுரியமே கண் வளராய்!
தந்தை குலம் விளங்கிடவே தரணியிலே வந்துதித்தாய்!

தாய் மனசு குளிர்ந்திடவே தங்கமே நீ வளர்வாய் !

ஆரிரரோ ஆராரோ அள்ளி வைத்த பொன்மழையே !

ஆரிரரோ ஆராரோ அஞ்சுகமே கண் வளராய் !

X