கண் விழிக்க அலாரம் வைத்து கண் கசக்கி விழித்து,

கண் முடி தியானிக்க கண நேரம் ஒதுக்கி,

கண் விழிக்கும் கைக்குழந்தை கண்ணில் படாமல் ஒதுங்கி ,

கண் விரித்து நோக்கி காலைப் பேருந்தைத் தேடி,

கண் பிதுங்கும் கூட்டத்துடன் காணாமல் கலந்து போய்,

கண்டு பிடித்துக் கூறும் குற்றம் கண்டுகொள்ளாமல் விட்டு,

கண் சிமிட்டும் நேரம் உணவை கடகடவென விழுங்கி,

கண் ஜாடைப் பேச்சுக்களை கண்டும் காணாமல் ஒதுக்கி,

கண்ணால் சிரிக்கும் கணவர் முன் கண்ணயர்ந்து தூங்கி,

கண் சிமிட்ட நேரமின்றி கணப்பொழுதும் தவித்தபோது ,

கண்ணுக்குள் சந்தோஷம் கணநொடி மின்னுவதேன்,

கண்ணுக்கெட்டும் நேரத்தில் …..

நாளைப்பொழுது ஞாயிற்றுக்கிழமை.

X