இன்று அதிகாலை மழை பெய்தது .
எப்போதையும் விட சிலிசிலிர்பாய் இருக்கிறது .
முற்றத்தில் குளிர் காற்று வீசியது .
எப்போதையும் விட குளுகுளுப்பாய் இருக்கிறது .
மெல்லிசாய் புள்ளினங்கள் ஓசை
எப்போதையும் விட இன்னிசையாய் ஒலிக்கிறது.
வாசலில் வந்து வானத்தை நிமிர்ந்து பார்க்கிறேன்.
இளவானம் என்னென்னவோ கதை சொல்கிறது .
மெல்லிய பூஞ்சிறகு இதயத்தை வருட
மனசுக்குள் இனிப்பை வாரி இறைக்கும்
இத்தனை மாற்றங்கள் எதனால் ?
நேற்று மாலை என்னை பெண் பார்த்தவர்
சொன்ன வார்த்தையால் …
“உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு !”